A+ A-

உ.பி.யில் தொழிலாளர்களுக்கு ரூ.10-க்கு மதிய உணவு

 
Amma Unavagam
அம்மா உணவகம் பாணியில் உ.பி.யிலும் குறைந்த விலை உணவகம் துவங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக ரூ.10 விலையில் மதிய உணவு அளிக்கும் சோதனை முறையிலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை நேற்று முன் தினம் உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் லக்னோவில் துவக்கி வைத்தார்.



நேற்று முன் தினம் முடிந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் மதிய உணவாக சோதனை முறையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.10-ல் இரண்டு வகையான உணவு , முதல் வகையில், 10 முதல் 12 ரொட்டிகள், காய்கறி, பருப்பு, சாலட் மற்றும் வெல்லம் அளிக்கப்படுகிறது. மற்றொரு வகையில் 400 கிராம் சாதம், பருப்பு, சாலட் மற்றும் வெல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.



இதன் துவக்க விழா நிகழ்ச்சி, லக்னோவில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகத்திற்கானக் கட்டிடப் பகுதியில் நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்த அகிலேஷ், இவருடன் சேர்ந்து அவரது சில அமைச்சரவை சகாக்களும் அங்கிருந்த தொழிலாளர்களுடன் அமர்ந்து இந்த உணவையும் அருந்தினார்.

அடுத்து பேசிய அகிலேஷ், ''சோதனை முறையில் இந்த மதிய உணவு திட்டம் லக்னோவின் நான்கு இடங்களில் இருந்து அன்றாடம் விற்பனை செய்யப்படும். இதற்கான உணவுகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு 4 நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து உ.பி.யின் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.’ எனத் தெரிவித்தார்.



இதற்கான டெண்டரை ஓடும் ரயில்களில் உணவு வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மானிய விலையில் குடிநீரும் வழங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

அம்மா உணவகம் பாணியில் உ.பி.யிலும் குறைந்த விலை உணவகம் துவங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக ரூ.10 விலையில் மதிய உணவு அளிக்கும் சோதனை முறையிலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை நேற்று முன் தினம் உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் லக்னோவில் துவக்கி வைத்தார்.