A+ A-

சிகரெட்களில் 85% எச்சரிக்கைப் படம்: உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

No Smoking
85 சதவிகிதம் புகையிலைக்கு எதிரான எச்சரிக்கைப் படம் சிகரெட் பாக்கெட்‌களில் இருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தாக்கல் செய்த மனுவில் எச்சரிக்கைப் படங்கள் 85% அளவில் இடம் பெறுவதால் சிகரெட் பிராண்டின் பெயரையும், நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட முடியாது என்று புகையிலை நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

தற்போதுள்ள அளவிலேயே எச்சரிக்கைப் படத்தின் அளவை தொடர அனுமதிக்குமாறு புகையிலை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள், புகையிலை நிறுவனங்கள் கோரிக்கை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதுதொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுக்களை 8 வார காலத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

85 சதவிகிதம் புகையிலைக்கு எதிரான எச்சரிக்கைப் படம் சிகரெட் பாக்கெட்‌களில் இருக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.