A+ A-

தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் தங்க சட்டை அணிந்து கின்னஸ் சாதனை

 
pankaj parakh gold shirt
தங்க சட்டை அணிந்து மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நடத்தியவர் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலா நகர துணை மேயரும், பிரபல ஜவுளி நிறுவன அதிபருமான பங்கஜ் பராஃக் தான். இந்த தங்க சட்டை 4.10 கிலோ எடையும், ரூ.1.30 கோடி மதிப்பும் கொண்டது. இதற்கான கின்னஸ் உலகச் சாதனை சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

பங்கஜ் இதுகுறித்து கூறுகையில், மகராஷ்டிரா மாநிலத்தின் ஒரு சிறிய கிராமப் பின்னணி கொண்ட எனக்கு இந்த சாதனை, மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது. இதன்மூலம் எனது கிராமத்தின் பெயர் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

தங்க சட்டை அணிந்து மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.