A+ A-

மே17 - 2009 - தமிழினப் படுகொலை நாள் - நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்த நாள்.

 
Tamil National Liberation Struggle and National Leader Prabhakaran
மே17 - 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.

ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது. போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர்.[15] இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இரு தசாப்தங்களாக போர் மற்றும் தோல்வியுற்ற நான்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள், மற்றும் 1987 - 1990 காலப்பகுதியில் இலங்கையில் நிலை கொண்ட இந்தியப் படைகளின் தோல்வியில் முடிந்த பிரசன்னம் என்பவற்றின் பின் மார்கழி 2001 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் 2002 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், 2005 பிற்பகுதியில் முரண்பாடு ஆரம்பமாகி, பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யூலை 2006 இல் அரசு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் புலிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது. 
 
Tiger Movement Liberation Tigers of Tamil Eelam
 

2007 இல் அரசாங்கம் தாக்குதலை வடபகுதிக்கு மாற்றி, 10,000 க்கு மேற்பட்ட தடவைகள் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றச்சாட்டி ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதன் மூலம் புலிகளின் தங்கள் தலைமைச் செயற்பாட்டிடமாக கொண்டிருந்த கிளிநொச்சி, பிரதான இராணுவ மையமாக இருந்த முல்லைத்தீவு, முழு ஏ9 நெடுஞ்சாலை ஆகிய இடங்களைக் கைப்பற்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் 17 மே 2009 அன்று தோல்வியுற்றனர். இதன் பின்னர் ஐ.நா.வினால் இலங்கை அரசும் புலிகளும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டனர். இதற்கான பதில் கூறலில் விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இலங்கை அரசு நெருக்கடிகளுக்கு உட்பட்டு வருகின்றது.

ஈழப் போராட்ட காரணங்கள் ,

  • தனிச் சிங்களச் சட்டம்
  • பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
  • இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
  • கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
  • திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
  • அரச பயங்கரவாதம்
  • யாழ் பொது நூலகம் எரிப்பு
  • சிங்களமயமாக்கம்
  • வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
  • சிங்களப் பேரினவாதம்
  • ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
  • அரச சித்திரவதை
  • பாலியல் வன்முறை
  • இலங்கைத் தமிழர் இனவழிப்பு
  • இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்
  • இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு



மே17 - 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.